மக்களுக்கு மீன்பிடிக்க தடைவிதித்துவிட்டு மீன்பிடியல் ஈடுபடும் வனஜீவராஜிகள் திணைக்களம்

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தாம் பல ஆண்டுகளாக குளங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது தேசிய பூங்கா எனும் பெயரில் வன  ஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் மீன் பிடிக்கச் செல்லும்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தம்மை தடுத்து வருவதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் நன்னீர் மீன்பிடியாளர்கள் சில இடங்களில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீன்பிடிப்பதற்காக தங்களுக்கு லஞ்சப் பணம் தரவேண்டும் என்று கேட்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை கேவில் பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகமும் ஒரு விருந்தினர் விடுதியில் உள்ளதாகவும் அந்த விடுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தம்மை தொழிலில் ஈடுபடாது தடுத்துவிட்டு அவர்களே மீனைப்பிடித்து தங்களுடைய விடுதி மற்றும் அலுவலகத்துக்கான பயன்படுத்துவதோடு ஏற்றுமதியும் செய்வதாகவும் அந்த பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து எவரும் எந்த ஒரு குளத்திலும் மீன்பிடியில் ஈடுபட கூடாது எனவும் வன ஜீவராஜிகள் திணைக்கள அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக அந்த மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களம் நன்னீர் மீன் பிடியில் ஈடுபட்டுவதை தடுப்பதனால் தம்மால் பொருளாதாரத்தை ஈட்ட முடியாது உள்ளதாகவும் அந்த மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பாக கேவில் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஒரு கடிதம் ஒன்று யாழ் மாவட்ட செயலர் பிரதேச செயலாளர் வடமராட்சி கிழக்கு உட்பட பல்வேறு இடத்திற்கும் அனுப்பியுள்ளதாகவும் இது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்