பருத்துறையில் தொடரும் கொள்ளை..! வீட்டுக்குள் புகுந்து கா்பிணி பெண் மீதும் தாக்குதல், பெருமளவு நகை கொள்ளை..

யாழ்.பருத்துறை- உபயகதிா்காமம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை அடித்து அச்சுறுத்திவிட்டு பெருமளவு பணம், நகை, பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்களை கொட்டன்களால் தாக்கிவிட்டு வீட்டினுள் நீண்டநேரம் தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த நான்கு பவுண் தங்க நகைகளை கொள்ளைய­டித்து
சென்றது என்று பொலிஸ் முறைப்­பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயம டைந்த கர்ப்பி­ணிப் பெண் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள­துடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்­களால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.