கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களை புறந்தள்ளி இந்தியா மற்றும் ரணில் அரசின் முகவர்களாக செயற்படுகிறது. கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா மற்றும் இலங்கை அரசுகளின் முகவர்களாக செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் (முழுமையான வீடியோ இணைப்பு) நேற்று முன் தினம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட பத்து பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வுகள்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் திரு.சிறி தலமையில் உடுத்துறையில் இரண்டு நிமிட அக வணக்கத்துடன் இடம் பெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான துவிச்சக்கர வண்டிகளை தமிழ் தேசிய மக்கள்  முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் இ.முரளீதரன் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா விஜயழகன் ஆகியோர் வழக்கி வைத்தனர்.தொடர்ந்து கருத்துரைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகொயோர் நிகழ்த்தினர்.இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு பிரதேச செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.புலம் பெயர் உறவுகளின் இதவியுடன் இத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிட தக்கது