கூட்டமைப்பு உயர்த்தி பிடித்தது….!! 27 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி..

ஐக்கியதேசிய கட்சி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது பிரேரணைக்கு 92 பேர் ஆதரவாகவும் எதிராக 119 பேரும் வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்அண்மைக்காலமாக சமகால அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு
ஆதரவு தெரிவித்து அரசாங்கத்தை காப்பாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது