மரண தண்டனைக் கைதிகள் ஜனாதிபதியைக் கொலை செய்ய திட்டம் : திடுக்கிடும் தகவலை போட்டுடைத்தார் தயாசிறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதால் சிறைக்கைதிகள் சிலர் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக சிறைச்சாலையிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கடண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.