ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது – வைகோ!

இன படுகொலையின் போது ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண்போகாது என மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நடராசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவிலாளர்களிடம் கதைத்தபோதே இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ஈழத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் அவர்கள் தந்த உயிர்கள் ஒருபோதும் வீண்போகாது. இந்த இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள இனவாத அரசை அனைத்துலக நீதிமன்ற குற்றவாளி கூட்டில் நிறுத்தி தண்டனை வழங்கி தரவேண்டும். சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
சிறையில் இருக்கும் தமிழர்கள், புலிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கிலும் , கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். பறிக்கபட்டுள்ள தமிழர் காணிகளை திரும்ப தமிழர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்படவேண்டும் என்பதே இலக்காக கொண்டு படிந்த மாவீரர்கள் மீது சூளுரைத்து இந்த இலட்சியங்களை வென்றெடுப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே தீர்வாகும் என வைகோ தெரிவித்துள்ளார்.