நம்பிக்கையில்லாப் பிரேரணை;விவாதத்திற்கு கட்சி தலைவர்கள் இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நாடாளுமன்றில் விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி.) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பேசப்பட்டது.

அதன்பிரகாரம் குறித்த பிரேரனையை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதிக்க கட்சி தலைவர்களினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படும் என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.