வீசப்பட்ட துப்பாக்கி 10 வருடங்களின் பின் நந்திக்கடல் பகுதியில் மீட்பு..

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஒன்று நந்திக்கடல் பகுதியில்       மீட்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்னால் 04.07.19 அன்று கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது
இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் பொலீசார்,படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில்
ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று இனம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின்
முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றிற்குள் எறிகணை ஒன்றும் மக்களால் இனம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கேப்பாபுலவு நிலமீட்பு போராட்ட மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளதுடன் காணியின் உரிமையாளர்கள் கிணறு வெட்டியுள்ளார்கள்
அப்போது எல்லாம் இல்லாத குண்டு தற்போது வந்துள்ளது இது படையினர் திட்டமிட்டு மக்கள் குடியிருப்புக்கள் கொண்டுவந்து போட்டுள்ளதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்