காணி தொடர்பான சட்டம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்வு

காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டம் தொடர்பாக இதுவரையில் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் எடுக்காமல் இருப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.