நிராவியடி பிள்ளையாா் பொங்கல் விழா..! அரசியல் தலைவா்களும் பங்கேற்பு..

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் தமிழா்களின் உாித்தை நிலைநாட்டும் வகையில் 108 பானையில் பொங்கல் நிகழ்வு இன்று காலை நடைபெறும் நிலையில் அரசியல் தலைவா்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனா்.வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பொதுமக்கள் குறிப்பாக இளைஞா்கள் கலந்து கொண்டுள்ளதுடன் அரசியல் தலைவா்களும் கலந்து கொண்டுள்ளனா். குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா,
மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
என பலா் கலந்து கொண்டுள்ளனா்.