தனிமை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அரசியலுக்கு வந்தேன்-விக்கினேஸ்வரன்

மிக நீண்டகாலம் நீதிபதியாக பணியாற்றியிருந்த நிலையில் வாழ்க்கையின் பெரும் பகுதியை மக்களில் இருந்து தூங்கிய தனிமை வாழ்க்கையாக கழிந்துவிட்டது. அந்த வெற்றிடத்தை போக் கவே அரசியலுக்கு வந்தேன் என முன்னாள் முதலமைச்சர்.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

நாகர்கோவிலில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர மனிதத்துவ உணர்வுகள் இருந்தபோதும் அதை வெளிக்கொண்டுவர எனது பதவி முட்டுக்கட்டையாக இருந்தது. தீர்ப்புக்களில் அவை பிரதிபலித்தன.
ஆனால் மக்களோடு மக்களாக இணைந்து செயற்பட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது அரசியலில் முழுநேரமாக இறங்கிய பின்னர் எம் மக்கள்தான் எனது கரிசனையாக ஆகிவிட்டார்கள்.
மக்களோடு மக்களாக இணைந்து செயற்படவே அரசியலில் இறங்கினேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.