இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்ட நிகழ்வா? அமெரிக்காவுக்கான காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்

இராணுவத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில்  இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கொடி பிடித்து ஆற்பாட்டம் நடத்தும்  காணாமல் ஆக்கபட்ட உறவினர்களால் ஆர்பாட்ட பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டிருந்தது.

 

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர்ந்து 868 நாட்களாக  போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்  கந்தசாமி கோவில்வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக  தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலை செய்து விட்டு களியாட்ட நிகழ்வா, விழித்தெழு தமிழினமே என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.