பலாலி விமான நிலை­ய அபி­வி­ருத்தி பணி­கள் ஆரம்பித்துவைப்பு!

யாழ்.பலாலி விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­யும் பணி­கள் அமைச்­சர்

அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது

19.5 பில்­லி­யன் ரூபா செல­வில் பிராந்­திய வானூர்தி சேவை­களை நடத்­தக் கூடிய வகை­யில் பலாலி விமான நிலை­யம் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது.இரண்டு கட்­டங்­க­ளாக இந்த அபி­வி­ருத்­திப் பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

யாழ் , பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு முத­லா­வது வானூர்தி அடுத்த மாதம் தனது பய­ணத்தை மேற்­கொள்­ ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.