தாயகம் திரும்பிய தமிழர் ஒருவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது!

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ தங்கத்துடன் வந்த நபரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரான இவர் பிரான்ஸ் பிரஜாவுரிமை கொண்டிருப்பதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் அரச உடமையாக்கப்பட்டுள்ளது. குறித்த தங்கத்தின் பெறுமதி 80 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிஸ்கட் பக்கட் ஒன்றினுள் வைத்து தங்கம் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 48 வயதுடைய என தெரிய வந்துள்ளது.

அவர் பிரான்சில் இருந்து ஓமான் சென்று, அங்கிருந்து விமானம் ஊடாக நேற்று மாலை 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது ஒரு கிலோ கிராம் பெறுமதியான தங்க பிஸ்கட் ஒன்று மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.