இரு ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்-மைத்திரி!

தென் மாகாண ஆளுநர் ரஜித்த கீர்த்தி தென்னக்கோன் , மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி.

இந்த இரு ஆளுநர்மாரும் நிர்வாக செயற்பாடுகளை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்தே ஆளுநர் இருவரையும் பதவி நீக்க தீர்மானித்த மைத்ரி , விரைவில் இறுதி முடிவை எடுத்து புதியவர்களை நியமிக்கவுள்ளாரென அறியமுடிந்தது.