சிறுநீரை பருகுமாறு மகளையும்க்கு சித்திரவதை செய்த தந்தை..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீா்ப்பு..

தன்னுடைய சொந்த மகளை பல வருடங்கள் அடித்து சித்திரவதை செய்ததுடன், சிறுநீரை பருகுமாறு கூறி சித்திரவதை செய்த தந்தைக்கு 15 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து இரத்தினபுாி மேல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. குறித்த நபர் இரண்டு திருமணங்களை புரிந்துள்ளார். முதலாவது மனைவியின் மகளுக்கு தாத்தா மாத்திரமே பாதுகாப்பாகவும் பாசமாகவும் இருந்த வந்துள்ளார். கணித பாடத்தில் சிறுமி தேர்ச்சி குறைவாக இருந்ததன் காரணமாக சிறுமியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மயக்கமுற்ற சிறுமி அச்சத்தில் சிறுநீர் கழித்துள்ளார். அதனை அவதானித்த தந்தை அதனை பருகுமாறும் அடித்துள்ளார். சிறுமி பருகியதன் பின்னர் மீதமான சிறுநீரை தலையில் ஊற்றியும் சித்திரவதை செய்துள்ளார். சிறுமியின் பாதம் முதல் உடலின் அனைத்து
பாகங்களிலும் தீக்காயங்கள் காணப்பட்டுள்ளன. 8 வயதான குறித்த சிறுமிக்கு 6 வயது முதல் இவ்வாறான சித்திரவதைகள் தந்தையால் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தாத்தா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, வழக்கு தொடரப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வந்த நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.