சிறுமியை கா்ப்பவதியாக்கியவருக்கு நீதிபதி மா.இளஞ்செழியன் கொடுத்த தண்டணை..

கிண்ணியாவில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கா்ப்பவதியாக்கிய நபருக்கு 2 வருடங்கள் கட்டாய சிறைத்தண்டணை மற்றும் இழப்பீடு விதித்து திருகோணமலை உயா் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீா்ப்பளித்துள்ளாா்.
சந்தேகநபருக்கு இரண்டு வருடம் கட்டாய சிறைதண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், மூன்று வருட சிறைதண்டனையும்,பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அதனை செலுத்த தவறும் பட்சத்தில்
மூன்று மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மணியரசம்குளம், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய, முகமது சரீப் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிண்ணியா – மணிராசம்குளம் பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபருக்கெதிராக வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் வைத்திய அறிக்கைகளின் பிரகாரம் குற்றத்தினை புரிந்துள்ளார் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு குற்றவாளிக்கு சிறை தண்டனை ,நஷ்டஈடும் விதித்து திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.