கிளிநொச்சி புதிய வாழ்வு இல்லத்தின் கட்டுமானப் பணிக்கு நிதி உதவி

கிளிநொச்சி – இரணைமடுவில் இயங்கும் புதிய வாழ்வு இல்லத்தின் கட்டுமானப் பணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவர் மேற்படி அமைப்புக்கு ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபா நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அந்த நிதியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியிருக்கின்றார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழரின் முன்மாதிரி...

மேற்படி புதிய வாழ்வு இல்லத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இறுதிப் போரில் சிக்கிய நிலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் உறவுகளின் மேற்படி பராமரிப்பு இல்லத்திற்கு மேலும் தேவைகள் அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.