வடமராட்சியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியும் கூட்டமும் இடம் பெற்றது

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை வடமராட்சி வடக்கு வலயக் கல்வி பணிமனை வடமராட்சி வடக்கு பிரதேச செலகம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த தேசியப் போதைப் பொருள் தடுப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் இடம் பெற்றது.பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை திட்டமிடல் பிரிவு மருத்துவ அதிகாரி மருத்துவ கலநிதி v.கமலநாதன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தலமை உரையை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பணிப்பாளர் வழங்கினார். தொடர்ந்து கருத்துரைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் மன நல வைத்துய நிபுணர் சிவசுதன் வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் திரு ரவீந்திரன் உட்பட பலர் நிகழத்தினர்.இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் ஏ.சிறி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார் உட்பட பலர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதில பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பருத்தித்துறை சுகாதார வைத்தய அதிகாரி பணிமன உத்தொயோகத்தர்கள் வடமராட்சி கல்வி உத்தியோகத்தர்கள் வலய கல்வி அலுவலக ஊழியர்கள் இருநூறு வரையானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பமான போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைை சென்றடைந்து அங்கே விழிப்புணர்வு கூட்டம் இடம் பெற்றதுநாகர்கோவில்