யாழ். அல்வாயில் ரவுடிக் கும்பல் அட்டகாசம்: மூவர் படுகாயம்

யாழ். அல்வாய் கிழக்கு அத்தாய் பகுதியில் பத்துப் பேர் ரவுடிக் கும்பல் நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம்  (30) பிற்பகல் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இதேயிடத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துப் பொலிஸார் மேற்படி சம்பவத்துக்கு காரணமான சந்தேகநபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.