மடு அன்னைக்கு இன்று ஆடி திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடினா்..

மன்னாா்- மடு மாதா தேவாலயத்தின் ஆடி திருவிழா இன்று நடைபெறுகின்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகின்றது.
மடு அன்னையின் அருளைப் பெறுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்துள்ளனா்.