பொலிஸாரை மோட்டாா் சைக்கிளால் மோதி தள்ள முயற்சித்தவா் மீது சரமாாி துப்பாக்கி சூடு..!

மோட்டாா் சைக்கிளால் பொலிஸாரை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய மோட்டாா் வண்டி ஓட்டுனா் மீது பொலிஸாா் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனா்.
இந்த சம்பவம் மொனராகலை- புத்தல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும தொியவருவதாவது,
குடிபோதையில் மோட்டார் வண்டியை, சென்று பொலிஸ் அதிகாரியை மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், இன்னொருவருடன் மோட்டார் சைக்கிளில் புத்தல நகரத்திற்கு பயணித்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எப்படியிருப்பினும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.