தமிழீழ விடுதலை புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை.பொய் கூறும் இராணுவம்

2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை. என இராணுவம் அறிவித்துள்ளது.
தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகை ஒன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே குறித்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பீ.அத்தபத்து என்பவரினால் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய தமிழ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை.

அவர்கள் இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளனர் என குறித்த பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரங்கொண்ட நிறுவனமான
புனர்வாழ்வு ஆணையாளர் காரியாலயத்திடம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

இந்த நிலையில் சிங்கள அரசும் அதன் கைக்கூலி இராணுவமும் சர்வதேச மின்சாரக்கதிரையில் என்ன கூறப்போறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேணும்