குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார் றிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியூதீன்  குற்ற புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் விவகார முன்னாள் அமைச்சருமான ரிசாட் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில்
விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலமொன்றை அளிக்கும் நோக்கில்
அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரிசாட் பதியூதீனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.