கிளிநொச்சி – பரந்தன் பகுதிக்கு இடையில் இரவு புகைரதத்தில் மோதி: சிறுவன் பலி?

இன்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் மோதுண்டு மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
14 வயது இராஜஸ்வரன் லதுசான் என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கும் கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து புகையிரத்தில் பலியான சிறுவனை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.