இன்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (02) நண்பகல்- 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ச்சியாகப் பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் இந்தமாதம்-11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு திருமஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தேர்த் திருவிழாவும், மறுநாள் செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தோற்சவமும் இடம்பெறுமென ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.