அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணுக்கு உரிய சிகிச்சை

எம்மில் பலர் இன்றைய திகதியில்  மருத்துவரை சந்தித்து,எமக்கு அல்சர் இருக்கிறது. சிகிச்சையளித்து குணப்படுத்துங்கள் என்றும், எமக்கு கேஸ் ட்ரபுள் எனப்படும் வாயுத் தொல்லை இருக்கிறது. மருந்து கொடுங்கள் என்றும் அவர்களாகவே தங்களுடைய குறைபாடுகளை, மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்ளாமல் சொல்கிறார்கள்.

 

இது முற்றிலும் தவறு. ஏனெனில் இன்றைய திகதியில் எம்மில் பெரும்பாலானவர்கள் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

நாம் கீழே விழுந்தால் அடிபட்ட தோல் பகுதியில் ஏற்படும் புண்ணைப் போன்று, வயிற்றுக்குள்  அமிலம் அல்லது வேறு கூறுகளால் ஏற்படும் சேதமே வயிற்றுப்புண் எனப்படுகிறது. வயிற்றில் புண் இருந்தால் வயிற்றின் மேல் பகுதியில் சிலருக்கு வலி இருக்கும். சிலருக்கு சாப்பிட்டவுடன் அசௌகரியமாக உணர்வார்கள். சிலருக்கு எரிச்சல் இருக்கும். சிலருக்கு வாந்தி ஏற்படும். சிலருக்கு அஜீரணம் ஏற்பட்டு, அதன் காரணமாக வாந்தி எடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதன்போது வயிற்றிலுள்ள ஹெச் பைலோரி ( H Pylori)எனப்படும் வைரஸ் கிருமி, நாம் சாப்பிடும் உணவுகளை கிரகித்து, சிதைத்து அமில கூறுகளை அதிகரித்து புண்ணை உண்டாக்குகிறது.

அதிக நேரம் சாப்பிடாமல் இருப்பது, அதாவது உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்த்து, மதியம் ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது, பிறகு பணி பளுவின் காரணமாக பசி எடுத்தாலும் அதை சாப்பிடாமல் புறக்கணிப்பது, ஈடுபட்டிருககும் வேலை கொடுக்கும் மன அழுத்தத்தின் காரணமாக உணவை தவிர்ப்பது,

வலி நிவாரண மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிடுவது. போன்ற பல காரணங்களில் சிலருக்கு அல்சர் ஏற்படுகிறது.  சிலர் அல்சரின் காரணமாக இரத்த வாந்தி கூட எடுப்பார்கள். இத்தகைய பாதிப்பிற்கான அறிகுறி ஏற்பட்டால், அவர்களுக்கு எண்டாஸ்கோபி மூலம் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் புண்ணைப்பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்சரை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில் அது புற்று நோயைக்கூட உருவாக்கக்கூடும். சிலருக்கு வயிற்றில்  உணவு உள்ளே செல்லாத அளவிற்கு obstruction எனப்படும் தடை ஏற்பட்டிருக்கும். இவர்களுக்கு எக்ஸ்ரே எடுத்து. பாதிப்பின் தன்மையை கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.

டொக்டர் சபரீசன்.

தொகுப்பு அனுஷா.