மைத்திரியின் தூக்கு தண்டனை தொடர்பான அறிவிப்பு – 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரை தூக்கிலுடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் உட்பட 10 அமைப்புக்கள் ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளன.

இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில் பலரும் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது