புகையிரதத்துடன் மோதி பெண் பலி வவுனியாவில் சம்பவம்

புகையிரதத்துடன் மோதி இன்று அதிகாலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இன்று அதிகாலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றது அறியப்பட்டுள்ளதுடன்  சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இவ்விபத்தில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வயது 65 பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்மணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  அப்பகுதி மக்கள் தெரிவிப்பதுடன் இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்த எவ்விதமான தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்று அதிகாலை மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் புகையிரதம் தரித்து நிற்கவில்லை  என செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.