திருமண வீட்டில் வாய்த்தா்க்கம், காதை கடித்து துப்பிய நபா் கைது..!

பதுளை மாவட்டம் பள்ளக்கட்டுவை பகுதியில் திருமண வீடொன்றில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் மோதலில் ஈடுபட்ட ஒருவா் மற்றவாின் காதை கடித்து துப்பியுள்ளாா்.
பள்ளக்கட்டுவை நகரின் புறநகர்ப்பகுதியில் வீடொன்றில் திருமணம் வைபவ உபசாரங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. இதன் போது இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
மோதலில் ஒருவரின் வலது பக்க காதைக் கடித்து மற்றவர்துண்டாடியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை துண்டாடப்பட்ட காதுடன், எல்ல அரசினர் மருத்துவமனையில் சேர்ந்தனர். குறித்த நபரின் காதைத் துண்டாடிய நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.