சட்டமா அதிபரின் அதிரடி உத்தரவு

முன்னாள் பொலிஸ்மா அதிபா் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபா் தப்புல்ல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளாா்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர
ஆகிய இருவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவுறுத்தலை சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரட்ணவுக்கு இன்று (ஜூலை 1) வழங்கியுள்ளார்.