காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் தமிழரசுக்கட்சின் மாநாட்டுக்கு எதிராக போராட்டம்-தப்பி ஓடிய சுமந்திரன்

தமிழரசு கட்சியின் மாநாடு நடைபெற்ற யாழ்.வீரசிங்கம் மண்டபம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகளின் உறவுகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இன்று(30) ஞாயிற்றுக்கிழமை இலங்கைத்தமிழ்அரசுக்கட்சியின்16 ஆவது தேசியமாநாடு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்  சோ. சேனாதிராஜா  தலைமையில் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருந்தது. இதன் போது  கட்சியின் தேசிய மாநாட்டை குழப்புவதற்காக  காணாமல் போனவர்களின் உறவுகள் சம்பவ இடத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெறும் மண்டபத்தை சுற்றி  நெருங்காமல் கடும் பாதுகாப்பு போடப்பட்டது. எனினும்  காணாமல் போன உறவுகளை தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகள்  மண்டபத்தின் முன்பாக போராட்டம்  வருகை தந்ததுடன் பல்வேறு கோசங்களை எழுப்பி தமிழ் தேசிய தலைமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்த போராட்டம் வவுனியா பகுதியில் இருந்து பஸ்களில் வந்து இறங்கிய காணாமல் போன உறவுகளை தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகளை வந்து போராட்டத்தை மேற் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் மண்டபத்தை நெருங்க விடாமல் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.  மேலும் இம் மாநாடு ஆரம்பமாக முன்னர்  யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்குக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்  முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா. சம்பந்தன் தலைமையில் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு மாநாடு இடம்பெற்ற வீரசிங்கம் மண்டபம் வரை பேராளர்கள் ஊர்வலம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.  வீ   ரசிங்கம் மண்டபத்தில் நடக்கும் தேசய மாநாட்டில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர் சித்தார்த்தன் ரெலோ சார்பில் கோடீஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.