அபிவிருத்திக்கு பங்காளிகளாக இருக்கின்ற மலையக மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இல்லை-அன்ரனி ஜேசிதாசன்

பல நூறு ஆண்டுகளாக இலங்கையின் அபிவிருத்திக்கு த பங்காளிகளாக இருக்கின்ற மலையக மக்கள் ஒரு துண்டு காணி கூட இன்றி அவதிப்படுவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பாளர் ஆண்டனி ஜேசுதாசன்  தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இருநூறு முன்னூறு வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் அபிவிருத்திக்காக பங்களிப்பு செய்து வரும் மலையக மக்கள் ஒரு துண்டு காணி கூட இன்றி மிகவும் அவதிப்படுவதாகவும் தமது பொருளாதாரத்தை இட்டுச் செல்வதற்கும் வாழ்விடத்தை அமைத்துக் கொள்வதற்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார் என்றும் நல்லாட்சி அரசு காலத்தில் ஒரு சில இடங்களில்  மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த காணி உறுதிப்பத்திரம் மற்றைய ஆவணங்கள் செல்லுபடியற்றதாக இருப்பதாகவும் அந்த ஜேசுதாசன் கவலை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் எடுத்து மலையக மக்களுக்கு வீடுகள் மற்றும் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்