இலங்கையில் மது பாவனை பல மடங்கு அதிகரிப்பு-ஐ நா கவலை

இலங்கையில் தனிநபர் மதுபாவனை 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
2018ஆம் ஆண்டின் மதுப்பாவனை மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய நிலை அறிக்கையின்படி, கடந்த 2016ஆம் ஆண்டின் பின்னர் மதுப்பாவனையாளர்களின் எண்ணிக்கை 10.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அறிக்கையின்படி, புதிய மதுபாவனையாளர்களில் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறார்கள். மேலும் மதுப்பாவனையாளர்கள் மூவரில் ஒருவர் அதிகமாக மதுப்பாவனைக்குள்ளானவர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 சதவீதம் பேர் சட்டவிரோத மதுபானங்களை உட்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாட்டில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கலால் சட்டங்களைத் தயாரிக்கும் போது சுகாதாரம் மற்றும் நிதிக் கொள்கைகள் இரண்டையும் கூட்டாக பரிசீலிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.
எவ்வாறாயினும், 2006 ஆம் ஆண்டு 27ம் திகதி இலங்கையில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது.