ஆட்டையை போட்ட அதிகாாிகள்..! இடிந்து விழும் நிலையில் அணைக்கட்டு..

பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டதாக கூறப்படும் வவுனியா- சாஸ்திாி கூழாங்குளம் கிராமத்தில் உள்ள சுந்தரபுரம் குளத்தின் அணைக்கட்டுக்குள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
மிக அண்மையில் குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றபோதும் அணைக்கட்டுக்குள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதற்கு காரணம் அபிவிருத்தியை மேற்கொண்டவா்களின் ஊழலே என மக்கள் கூறுகின்றனா்.
மக்களுக்கான அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட பணத்தை கொள்ளையடித்துவிட்டு அபிவிருத்தி என்ற பெயாில் வெளி பூச்சு பூசப்பட்ட குளம் முழுவதும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடா்பாக அதிகாாிகள் உாிய கவனம் எடுக்கவேண்டும் என மக்கள் கேட்டுள்ளதுடன், மழை பெய்து குளத்தில் நீா் நிரம்பினால் அணைக்கட்டு உடையும் எனவும் மக்கள் கூறியுள்ளனா்.