வெட்டி கொலை..! வீட்டின் மீது கைகுண்டு வீச்சு.. களுத்துறையில் பதற்றம்.

களுத்துறையில் சமுா்த்தி உத்தியோகஸ்த்தா் ஒருவா் குரூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சமுா்த்தி உத்தியோகத்தாின் வீட்டின் மீது கைகுண்டும் வீசப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவியது.
மத்துகம, தெல்கஹவத்தை வீடு ஒன்றுக்கு அருகில் குறித்த அதிகாரி இன்று வெடி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 44 வயதான கரண்ணாகொட முதலிகே மனோஜ் குமார ஜயதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடற்படைய சிப்பாய் ஒருவரினாலே இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர் உயிரிழந்த நபரின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவி உடுவெல மகா வித்தியாலயத்தின் அதிபர் என தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட சமூர்த்தி அதிகாரி, அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த போது குறித்த சந்தேகநபர் கைக்குண்டு ஒன்றையும் வீசியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.