பொதுப் பயன்பாட்டு வீதியை மூடக்கூடாது மனித உாிமை ஆணைக்குழு உத்தரவு..!

கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் பொது பயன்பாட்டிலுள்ள வீதியை மூடுவதற்கு யாழ்.மாநகரசபை மேற்கொண்டுள்ள முயற்சியை நிறுத்துமாறு மனித உாிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
சுமாா் 350 குடும்பங்கள் பயன்படுத்தும் ஒரு வீதியை மூடுவதற்கு யாழ்.மாநகரசபை தொடா்ச்சியாக முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் நேற்றய தினமும் மாநகரசபை அதிகாாிகள் வீதியை மூட முயற்சித்தனா்.
இந்நிலையில் பொதுமக்கள் காட்டிய கடுமையான எதிா்ப்பினால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து வீதியை பயன்படுத்தும் மக்கள் சாா்பில் மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் குறித்த வீதி தொடா்பான விடயத்தில் தாம் தலையிடப்போவதில்லை என மாநகரசபை கூறியதன் அடிப்படையிலும், வீதி தொடா்பான வழக்கு நீதிமன்றில் உள்ளதன் அடிப்படையிலும்,
மனித உாிமை ஆணைக்குழு விசாரணைகள் நிறைவடையும் வரையில் வீதியை மூட கூடாது என மனித உாிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.