காத்தான்குடியில் தேடுதல் தொடா்கிறதாம்..!

காத்தான்குடி- ஒல்லிக்குளம் பகுதியில் இன்றைய தினம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நேற்றய தினம் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையினை தொடா்ந்து சுமார் 20 வாள்கள், புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலட்நைட் குச்சிகள், 8 லீற்றர் திரவ ஜெலட்நைட் மற்றும் ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்
மற்றும் வாள்கள் என்பன குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று மீட்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக இராணுவத்தினா் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனா்.