யாழில் பாழடைந்த கிணற்றிலிருந்து வெடி பொருள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புறூடி வீதிப் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிலிருந்த பாழடைந்த கிணற்றிலிருந்து வெடி பொருள்கள் மீட்கப்பட்டன.
கிணற்றில் வெடிபொருள்களை அவதானித்த காணி உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் குறித்த வெடிபொருள்கள் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.