வங்கி கட்டிடத்திற்கு அருகில் அபாயகரமான வெடி குண்டு..!

குருநாகல் மாவட்டத்திலுள்ள சமுா்த்தி வங்கி கட்டிடத்திற்கு அருகிலிருந்து அபாய கரமான குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தும்மலசூரிய உடுபந்தாவ பிரதேச செயலக காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூர்த்தி வங்கி கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வெடி குண்டை அவதானித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு கண்கானிப்பு பிரிவினர்
அவ்விடத்துக்கு விரைந்து பாதுகாப்பாக வெடி குண்டை அகற்றினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.