இலங்கையில் அத்தியாவசிய துறையாக மாறும் புகைரத சேவை..

புகைரத சேவையை அத்தியாவசிய துறையாக மாற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தொிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கை ரயில்வே சேவையில் ஓய்வுப்​ பெற்ற ரயில்வே சாரதிகள், கட்டுபாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள், சமிக்ஞை பரிசோதகர்கள், வீதி பரிசோதகர்கள், ஆகியோரை மீண்டும்
பணியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து நாரஹேன்பிட்டி- சாலிகா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.