பூஜித்தவிற்கு விஷேட சி.ஐ.டி விசாரணை

முன் அறிவித்தல் இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத் தொகுதிக்கு வந்து, அங்கு மின் தூக்கி மற்றும் வரவேற்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை கேவலமாக திட்டி, துன்புறுத்தல்களுக்குள்ளாக்கியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு – 3 இன் பொறுப்பதிகாரி இன்று கோட்டை நீதிமன்றுக்கு அறிக்கையளித்தார். இதனையடுத்தே கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.