தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளருமான ரேகாவின் மகளுக்கு விருது!!!!

இலங்கை படையினரால் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டவரும் தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளருமான ரேகாவின் மகளுக்கு பாடசாலை மட்டத்தில் எழுதிய நூல் ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விருது வழங்கியுள்ளார்.
தந்தையினை காணாமல் போகசெய்த படையினரிடம் இருந்து நீதியினை கோரி நிக்கும் வேளை தனது அரசியலுக்காக ஜனாதிபதி அழைத்து மதிப்பளித்துள்ளார்.
யாழ் சுண்டிக்குழி மகளீர் கல்லூரியின் மாணவியான அமுதவிழி தனது 17 அகவையில் சமூகசீரழிவுகளை ஒழித்து நற்பண்புகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் சுயமுன்னேற்ற சிந்தனைகள் அடங்கிய சிறகிருந்தால் போதும் சிறியது தான் வானம் என்ற நூலினை வெளியிட்டிருந்தார்.
குறித்த நூலின் வருமானத்தை அவர் சிறுவர் இல்லத்திற்கு வழங்கி இருந்தார்.
போரில் தந்தையினை இழந்த சிறுவர்களுக்கு உதவிகளையும் செய்துவந்துள்ளார். கல்வி பொதுதராதர பரீட்சையில் 9 பாடங்கிளலும் ஏ சித்தி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் அமுதவிழி.
அத்துடன் கட்டுரை, இலக்கிய போட்டிகளில் மாகாணமட்டத்தில் பங்குகொண்டு தங்கப்பதக்கத்தையும் , அகில இலங்கை ரீதியில் வெள்ளிபதக்கத்ததையும் பெற்று யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரது தந்தையான மகேந்திரராஜ்(றேகா) அவர்கள் 2009 ஆம்ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் படையினரிடம் சரணடைந்திருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது