தமிழர்களின் தலைநகரில் 25 அடி உயரமான புத்தர் சிலையை திறக்க மைத்திரி வருகிறார்

தமிழர்களின் தலைநகரில் 25 அடி உயரமான புத்தர் சிலையை திறக்கஏற்திபாடுருகோணமலை – தெவனிபியவர விகாரைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் ஏழாம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
தெவனிபியவர ஸ்ரீ இந்ரா ராம விகாரையில் 25 அடி உயரமான புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தர் சிலையினை திறந்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மொரவெவ பிரதேசசபையின் தவிசாளரும், இந்ரா ராம விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரியவருகிறது.