தப்பிச்சென்ற வெளிநாட்டு கைதிகள் – துப்பாக்கிசூடு நடத்திய காவலர்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு கைதிகள் இருவர் தப்பியோடியுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் நைஜீரிய இருவரே இவ்வாறு சிறைக்காவலர்களின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை விரட்டிச்சென்ற சிறைக்காவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி குறித்த கைதிகளை துரத்திப்பிடித்துள்ளனர்.
இதன்காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.