இன்றைய இராசி பலன் 25/06/2019 செவ்வாய்க்கிழமை

மேஷம்: மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். முற்பகலில் சற்று அலைச்சல் ஏற்பட்டாலும், பிற்பகலில் பல நல்ல பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை நிகழும். எதிர்பாராத தனவரவு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாளாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் பிரயாணங்கள் போன்றவற்றைப் பற்றி திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமணம் மற்றும் சுப காரியங்களைப் பற்றி சிந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஒரு சிலர் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான ஆதாயம் அடைவார். விநாயகப் பெருமானை வழிபட பல நல்ல பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களுக்கு காலைப்பொழுது சற்று பிரச்சனைகளோடு கூடியதாக இருந்தாலும், 10 மணிக்கு மேல் சந்திரன் பூர நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால் வாகன வகையில் ஆதாயம் பெண்களால் மற்றும் நண்பர்களால் தனலாபம், எதிர்பார்த்த பணம் வருதல் புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடர்பான தகவல்கள் வருதல் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடைவது நேற்றைய பொழுதில் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பது சொத்து மற்றும் வாகன வகையில் வாங்குவதற்கு திட்டமிடுவது போன்ற பல நல்ல செயல்கள் இன்றைய பொழுதில் நிறைவேறும். உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும். வெங்கடாஜலபதியை வழிபட நன்மைகள் பெருகும்.
மிதுனம்: மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு நிகழும். அவர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வித் திறன் நன்றாகப் பளிச்சிடும். கணவன் மனைவி உறவு காலைப் பொழுதில் சற்று பிரச்சனைகளோடு கூடியதாக இருந்தாலும், பிற்பகலில் ஒற்றுமை நிலவும். பேச்சில் நிதானத்தை கைக் கொள்வது நல்லது. வாகன வகையில் ஆதாயம் உண்டு. சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகரித்தாலும், வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதிப்பார்கள். குழந்தைகளால் செலவினங்கள் உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும் எதிர்பாராத தனவரவு உண்டு.
கடகம்: கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை நிகழும். கணவன் மனைவி உறவு அந்நியோன்னியமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு வேலை ஆட்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மையில் முடிப்பீர்கள், சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் பிற்பகலுக்கு மேல் நல்ல முடிவை எட்டும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். உடல் நலம் சீராக இருந்துவரும். புதிய வேலைவாய்ப்புகள் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
அரசியல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். சுப காரியங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நல்ல செய்திகள் வருவதும் பேச்சில் வெற்றி கிடைப்பதும் நடக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டாகும். வயதானவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது. அம்பாள் வழிபாடு ஏற்றம் தரும்.
சிம்மம்: சிம்ம ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். புது சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோனியமாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை நல்ல முடிவை எட்டுவீர்கள். குழந்தை பேரு தொடர்பான வைத்தியத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக பிரச்சனைகளை சந்தித்து வெற்றி காண்பீர்கள் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்கள் வெற்றியை கொடுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு உடல் நலம் நன்றாக இருந்து வரும் விநாயகப் பெருமான் வழிபாடு ஆக்கம் தரும்.
கன்னி: கன்னி ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். இருப்பினும், நாளின் இறுதியில் வெற்றி கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் முக்கிய முடிவுகள் ஒப்பந்தங்கள் போன்றவற்றை இன்று எடுப்பதை விட நாளை தள்ளி வைப்பது சிறப்பானதாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். பணிச்சுமை எவ்வளவு இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். வயதானவர்களுக்கு உடல்நலத்தில் சற்று தொல்லைகள் கொடுப்பதற்கான வாய்ப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மற்றும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வகையில் உங்களுடைய சிந்தனைகள் இன்று செல்ல வாய்ப்பு உண்டு. எதிர்காலத்திற்கான திட்டமிடுதல் உண்டு. அவைகளில் வெற்றி காண்பீர்கள். ஒரு சிலருடைய தாயாரின் உடல்நலம் லேசான அளவில் சிரமத்தைக் கொடுத்து சுகத்தை நல்கும். குழந்தைகளால் கல்விச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் மறைமுகப் போட்டி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும், இன் முகத்தாலும் இனிய சொல்லாலும் அனைத்தையும் வெற்றி காண்பீர்கள்.
துலாம்: துலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே அமையும். முற்பகலில் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், பிற்பகலில் நல்ல ஒற்றுமை கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளின் கல்வி செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று அலைச்சல்கள் இருந்தாலும், இறுதியில் வெற்றி கிடைக்கும். வயோதிகர்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்து வரும். சொந்த தொழில் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்கள் வெற்றியடையும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. கமிஷன் பங்கு வர்த்தகம் கணக்கு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் சற்று சிரமமாக சென்றாலும், இறுதியில் வெற்றி காண்பீர்கள். உணவு தொழில் மருத்துவத்துறை மருந்துத்துறை வரவு செலவு சுற்றுலாத்துறை மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இன்றைய நாள் ஆதாயம் தருவதாக அமையும்.
விருச்சிகம்: விருச்சகம் ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். மகம் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கும் இன்றைய நாள் 10 மணிக்கு மேல் பூரம் நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிப்பதால் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். தொழில் தொடர்பான பல முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் கல்விச் செலவுகள் அதிகரித்தாலும், நன்மையில் முடிவாகவே இருக்கும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணவரவு உண்டு. பெண்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். உடல் நலம் சீராக இருந்துவரும். புதிய வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாடு அல்லது வெளியூர் பிரயாணங்கள் பற்றி சிந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு சரியான வழியில் திட்டமிடுதல் நடக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதிப்பீர்கள். இன்று பிற்பகலுக்கு மேல் உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் .நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்களும் அலைச்சல்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தனுசு: தனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தெய்வீக திருப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு, கோவிலுக்குச் செல்லுதல், ஆன்மீக பெரியவர்களுடைய தரிசனம், ஆன்மீகத்தை பற்றிய சிந்தனைகள் போன்றவற்றில் உங்கள் மனம் லயிக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும். பெண்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத தனவரவு சற்று தாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான வாங்குதல் மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த தனவரவு இருக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருந்து வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு. வயதானவர்களுக்கு உடல்நலம் நன்றாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும் .நீண்ட நாள் பிரிந்திருந்த சொந்தங்கள் நெருங்கி வர காண்பீர்கள். முருகப்பெருமானின் வழிபாடு நல்ல ஆக்கம் தரும்.
மகரம்: மகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். தெய்வீக திருப்பணிகளிலும் கோவில்கள் செல்லுவது ஆன்மீக பெரியவர்களை சந்திப்பது இறைசிந்தனை போன்றவற்றில் மனம் லயிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், பிற்பகலில் ஒற்றுமை ஏற்படும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருந்து வந்தாலும், வெற்றிகரமாக சமாளித்து முன்னேறுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் ஆக இருப்பதால் புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் புதிய வேலையில் சேர்வது போன்றவற்றை இன்று தவிர்ப்பது நல்லது. யாகாவாராயினும் நாகாக்க என்பதற்கிணங்க பேச்சில் நிதானம் தேவை. தொழில் மற்றும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையாக இருப்பது நல்லது. பெண்கள் தொடர்பான வகையில் ஆண்களும், ஆண்கள் தொடர்பான வகையில் பெண்களும் சற்று விலகி நிற்பது நல்லது. காதல்வயப்பட்டு இருப்பவர்களுக்கு பிணக்குகள் வர வாய்ப்புண்டு என்பதால் பேச்சிலும் செயலிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். கோபத்தை குறைத்து குணத்தை கைக்கொண்டு இந்த நாள் இனிமையாக அடைப்பீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு ஆக்கம் தருவதாக அமையும்.
கும்பம்: கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பாராத தனவரவு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வியில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் வெற்றியை தருவதாக அமையும். புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள். ஆன்மீக சிந்தனைகள் மனதில் வந்து செல்லும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதில் வந்து விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானத்தை தரக்கூடிய நாளாக இன்றைய நாள் அமையும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சுபகாரியங்கள் மற்றும் திருமணம் தொடர்பான பேச்சுக்களில் வெற்றி கிடைக்கும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு பல இனிமையான நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான செய்திகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
மீனம்: மீன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். முற்பகலில் தொழில் மற்றும் உத்தியோக ரீதியாக சற்று சிரமங்கள் இருந்தாலும் பிற்பகலுக்கு மேல் இவைகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் கல்வி மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். உடல் நலம் நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தரும். கூடுதலான அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் இறுதியில் வெற்றியே கிடைக்கும். அரசியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகளையும், சூழ்நிலைகளையும் அடைவர். புதிய வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் குறிப்பாக திருமண காரியங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். வயோதிகர்களுக்கு உடல்நலனில் சற்று கவனம் தேவை. குழந்தைகளின் கல்வி மேம்படும். விநாயகப் பெருமான் வழிபாடு ஆக்கம் தருவதாக அமையும்.