ஆறு மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய ரவியின் மகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா கருணாநாயக்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.