வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய புதிய நிர்வாகம் இன்று தெரிவு

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு பா.கவிதானன் தலமையில் ஆலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. தாம் சமூக ஒடுக்கு முறைக்கு உட்படுவதாக தெரிவித்து கடந்த 28/5/2019. அன்று தொடக்கம் ஆலய முன்றலில் சத்தியா கிரக. போராட்டம் ஒன்றினை ஏழாம் மற்றும் ஒன்பதாம் திருவிழா உபயகாரர்களும் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்தவர்களுமான வரணி வடக்கு மக்கள் ஆரம்பித்திருந்தனர்.இந் நிலையில் கடந்த 03/06/2019 அன்று தற்காலிக வழிபடுனர் சபை ஒன்றை ஆரம்பித்திருந்த நிலையில் 14 நாட்கள் முன்னறிவித்தல் வழங்கப்பட்டு நிரந்தர ஆலய பரிபாலன சபை ஒன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் அகில இலங்கை சைவ மகா சபை பொதுச் செயலாளர் மருத்துவ கலாநிதி பரா நந்தகுமார், கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் திரு இன்பநாயகம், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு தனுஸன் அகில இலங்கை சைவ மகாசபை தலைவர் திரு கனகரத்தினம் இலங்கை இந்து பௌத்த பேரவை செயலாளர் திரு ராமச்சந்திரன் உட்பட பல பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். தொடர்ந்து சபையில் கூடியிருந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆலய வழிபடுனர் சபை உறுப்பினர்களால் புதிய நிரந்தர நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கான தலைவராக அகில இலங்கை சைவ மகாசபையின் பொதுச் செயலாளர் மருத்துவ கலாநிதி பரா நந்தகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டு அவரது தலமையில் நிர்வாக சபை தெரிவுகள் இடம் பெற்றன முதலாவதாக செயலாளர் தெரிவு செய்யப்பட்டார் செயலாளராக ஒன்பதாம் திருவிழா உபயகாரர்களில் ஒருவரான. பொ.மதியழகன் அவர்களும் தலைவராக மா.பாஸ்கரன் அவர்களும் உபதலைவராக வே. சதீஸ்வரன் அவர்களும் உப செயலாளராக பே.பாணுசாவும் பொருளாளராக வே. சுரேஷ்குமார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் நிருவாக சபை உறுப்பினர்கள்லாக 11 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.இன்றைய பொதுக்கூட்டத்திற்காக தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் வரணி வடக்கு சிமிழ் கண்ணகிபுரம் கிராமசேவையாளர் இந்து கலாச்சார திணைக்கள அதிகாரிகள் கலாச்சார திணைக்கள அதிகாரிகள் உட்பட பலருக்கும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு அதிகாரிகள் எவரும் இங்கு கலந்து கொள்ளவில்லை இந்நிலையிலேயே இன்றைய தினம் புதிய நிரந்தரமான வரணி வடக்கு சிம்மில் கண்ணகை அம்பாள் ஆலயத்திற்குரிய பரிபாலன சபை உருவாக்கப்பட்டது .இன்றைய தினம் இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை சைவ மகா சபை பொதுச்செயலாளர் மருத்துவ கலாநிதி பரா நந்தகுமார் அ ஏற்கனவே 83 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த ஆலயம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது ஒரு பொது ஆலயம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என்றும் இன்று தெரிவு செய்யப்பட்ட பரிபாலன சபை உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் அறிக்கைகள் என்பவற்றை திணைக்களத்தில் கையளித்தாலே போதுமானது என்றும் குறிப்பிட்டார் அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில் சமூகங்களை ஒடுக்குகின்ற இழிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்மையில் அவர்கள் சைவர்களே இல்லை என்றும் இவ்வாறான செயல்கள் வெட்கப்பட கூடியவை என்றும் இவ்வாறான சம்பவங்கள் இனி ஒரு இடத்திலும் இடம்பெறக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார் கடந்த 28 5 2019 அன்று ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் இன்று இணைந்திருந்த ஒன்பதாம் மற்றும் ஏழாம் திருவிழா உபயகாரர்கள் ம இணைந்தே இன்றைய தினம் இந்த புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தியிருந்தனர்.இந்நிகழ்வில் அகில இலங்கை சைவ மகாசபை தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கிராமியா உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் இணைப்பாளர் திரு அனுசன் மற்றும் வரணி வடக்கு சிம்மில் கண்ணகி அம்பாள் ஆலய சுற்றாடலிலுள்ள பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்தவர்களென சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.இவ்வாலயத்தில் கடந்த வருடம் சமூக ஒடுக்கு முறையின் அதி உச்சம் காரணமாக ஜேசீபி வாகனம் மூலம் தேர் இழிக்கப்பட்டதும் இந்த வருடம் திருவிழா நிறுத்தப்பட்டதும் பிரதேச செயலகம் மற்றும் இந்து கலாசார அதிகாரிகளோ மாவட்ட செயலக அதிகாரிகளோ இப் பிரச்சினையை தீர்த்து வைக்க முன்வராதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிள்ளது.