பிரதேச சபை உறுப்பினர் பதவியினை இழந்த பெண் உறுப்பினர்

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு விகிதாசார முறையில் தெரிவான பெண் வேட்பாளர் ஒருவர் மூன்று சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத காரணத்தால் அவரது  உறுப்பினர் என்ற பதவி இழக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செ.பிறேமகாந்  தெரிவித்துள்ளார்.

 

அன்ரன் ரத்னராஜா .லாவன்யா என்ற பெண் உறுப்பினர் கடந்த மூன்று அமர்வுகளில் கலந்துகொள்ளாத காரணத்தினால் அவரது பதவிநிலை இழக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் பிறேமகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பின் சுயேட்சைக்குழுவின்  உறுப்பினர் ஒருவரை கேட்டபோது குறித்த சபை உறுப்பினரின் பதவி நிலைக்கு பதிலாக இன்னும் ஒரு பெண் உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

குறித்த சுயேட்சைக்குழு கட்சியானது குறித்த சபை உறுப்பினருக்கு பதிலாக தனது பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து தேர்தல் திணைக்களம் ஊடாக உள்ளுராட்சி மன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும் என தெரியவந்துள்ளது.