கப்பம் வழங்க மறுத்த வா்த்தகா் குத்தி கொலை..!

தெஹிவளை பகுதியில் உள்ள ஹாட்வெயா் கடை ஒன்றுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் கடை உாிமையாளாிடம் கம்பம் கோாிய நிலையிலை, உாிமையாளா் அதனை வழங்க மறுத்ததை நிலையில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனா்.
இச் சம்பவம்    நேற்றறு   (24) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான அப்துல் அசீஸ் (60) என்பவரே உயிரிழந்துள்ளார். இதன்போது காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது அவர் தனியாகவே வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.